பின்னே ஞானும்

'வாஸந்தியும் லக்ஷ்மியும் பின்னே ஞானும்' என்றொரு மலையாளப்படம் கொஞ்ச வருடத்துக்கு முன் வந்தது. ரொம்ப அருமையான தலைப்பு என்றெல்லாம் சொல்லமுடியாது. படம் வெற்றியடைந்து பிரபலமானதோ இல்லையோ இந்தத் தலைப்பு மெகா ஹிட் ஆகிவிட்டது. அதற்குப் பின் எழுத்தாளர்களுக்கு தன் படைப்புகளுக்குத் தலைப்பு வைப்பதில் உள்ள நீண்டகால சிக்கல் எளிதில் நீங்கிவிட்டது போலும். எப்படி? ரொம்ப சுலபம். படைப்போ உடைப்போ எழுதி முடித்தவுடன் அதற்கு ஒரு தலைப்பும் கிடைக்கவில்லையெனில் உடனே எழுதியவற்றில் உள்ள ஏதாவது இரண்டு விஷயங்கள் அல்லது வார்த்தை களை தேர்ந்தெடுத்து அத்தோடு 'பின்னே ஞானும்' என்று சேர்த்துக்கொண்டால் தீர்ந்தது பிரச்சனை. இன்ஸ்டண்ட் தலைப்பு. பொருத்தமாகவும் இருக்கும்.

இவ்வாறாக நான் ஒப்பேற்றிய ஒரு பதிவின் தலைப்பு 'பையனும் டார்வினும் பின்னே ஞானும்.' அதற்கப்புறம் இதே மாதிரியான நிறைய தலைப்புகள் அவ்வப்போது கண்ணில் பட்டுக்கொண்டிருந்தன. இன்றைக்கு நண்பர் ரவி ஆதித்யாவின் வலைப்பதிவை எதேச்சையாய் மேய்ந்துகொண்டிருந்தபோது இதே பாணியில் 'ஹரியுடன் நானும் பின்னே டிவி சமையலும்' என்று தலைப்பு வைத்திருந்ததைப் பார்த்தேன். திடீரென்று இப்போது உற்றுக் கவனித்ததில் அநேகம் பேர் இந்த 'பின்னே ஞானும்' டைட்டில் வைப்பதை தொடர்ந்து வழக்கத்தில் வைத்திருப்பதாகப்பட்டது. இப்போதைக்கு இது ஒரு ட்ரெண்ட்-ஆகவே மாறிவிட்டும் இருக்கிறது என்று நினைக்கிறேன். உலகின் மிக ஜாலியான தலைப்பு என்கிற அந்தஸ்தை இது பெற்றுவிட்டது போலும். தன் தலைப்பு இப்படி பிரபலமாகிவிட்டது ஒரிஜினல் 'பின்னே ஞானும்' இயக்குநருக்கே தெரியுமா என்று தெரியவில்லை.

சற்று சுவாரஸ்யம் கொண்டு கூகிளில் கொஞ்சம் ஆராய்ந்ததில் மேலும் சுவாரஸ்யமான டைட்டில்கள் பல கிடைத்தன. கொஞ்சம் பெரிய லிஸ்ட் என்றாலும் சும்மா படித்து வையுங்களேன்.

டெல்லி கணேஷும் பின்னே ஞானும்
தோப்பும் புங்கை மரமும் பின்னே ஞானும்.
சுஜாதாவும் ஜெயமோகனும் பின்னே ஞானும்.
Torrent-உம் Badminton உம் பின்னே ஞானும்.
நேசமித்ரனும் நண்பர்களும் பின்னே ஞானும்.
ஞானும் சயன்ஸூம் பின்னே கொறச்சு காமெடியும் .
அண்ணாகண்ணனும் மீராஜாஸ்மினும் பின்னே ஞானும்.
பரிசலும் கோவியும் பின்னே ஞானும்.
போப்பும் ஷோவும் முனியும் பின்னே ஞானும்.
நானும் ஜாக்கி சேகரும் பின்னே அனானியின் வாந்தியும்.
வால்பையனும் வாசிப்பும் பின்னே ஞானும்.
ஞானும் பின்னே ஞானும் நடுவே ஞானமும்.
ஒரு செல்போனும் கிப்ட் கவரும் பின்னே ஞானும்.
Black Label ம் noodles ம் பின்னே ஞானும்.
ராஜாவும் சாருவும் பின்னே ஞானும்.
மஹாராஷ்டிராவும் பொங்கலும் பின்னே ஞானும்.
ஆனந்த விகடனும் அட்டைப்பட அழகியும் பின்னே ஞானும்.
ஈரோடும் லேடீஸ் ஹாஸ்டலும் பின்னே ஞானும்.
ஃப்ராய்டும் ஃபிரான்சிஸ் சேவியரும் பின்னே ஞானும்.
அத்னான் சாமியும் ஆசாத் அண்ணனும் அய்யனாரும் பின்னே ஞானும்.
பார்வதி ஓமனக்குட்டனும் பின்னே ஞானும்.
டேனியும் ஞானும் பின்னே என்டெ ஹஸ்பென்டும்.
பாட்டும் கதக்கும் குச்சுப்புடியும் பின்னே ஞானும்.
ஜகன் மோகினியும் அதிஷாவும் பின்னே ஞானும்.
சுந்தராம்பாளும் கருணாநிதியும் கமல்ஹாசனும் பின்னே ஞானும்.
சுனாமியும் பல்வலியும் பின்னே ஞானும்.
மலையாளபூமியில் நிங்களும் கள்ளும் பின்னே ஞானும்.
ஞானும் தற்கொலையும் பின்னே கொலையும்.
வண்டிக்காரத் தெரு மாரியம்மனும் ஆயில்யனும் பின்னே ஞானும்.

8 comments:

 1. நானும் இதை...ஹி.ஹீ..."டெல்லி கணேஷும் பின்னே ஞானும்" http://rekharaghavan.blogspot.com/2009/09/blog-post_14.html

  ReplyDelete
 2. :-) நல்ல கலெக்ஷன்.

  ReplyDelete
 3. ரேகா ராகவன் சார்: அதையும் இணைத்துவிட்டேன்.
  SRK: நன்றி.

  ReplyDelete
 4. இவ்ளோ தூரம் தேடிப் பிடிச்சு சுவாரஸ்யமா எழுதியிருக்கீங்க, ‘பின்னே ஞானும்’ ஒரு பின்னூட்டம் எழுதாட்டி எப்படி? நன்றி சித்ரன் :)

  ReplyDelete
 5. நன்றி சித்திரன் சார்.

  ReplyDelete
 6. @சொக்கன்: நன்றி!

  ReplyDelete
 7. ngnanum ende commentsum

  ReplyDelete
 8. ஹையா.........இதுல நானும் இருக்கேனே....!!!!!!!!!!!!

  ReplyDelete

இந்தப் பதிவைப் பற்றிய உங்கள் கருத்து?